Skip to content

கேடியீ நான்கு வெளிடப் பட்டது

Friday, 11 January 2008


கட்டற்ற மென்பொருளாலான அதிநுட்ப பணிச்சூழலின் நான்காவது வெளியீட்டினை கேடியீ வழங்குகிறது

நான்காவது மிகப்பெரிய வெளியீட்டுடன், கேபசூ சமூகம் கேபசூ நான்கின் சகாப்தத்தில் அடியெடுத்து வைக்கிறது.

கேடியீ 4.0.0 உடனடியாகக் கிடைக்கப் பெறுகிறது என்பதனை அறிவிப்பதில் கேடியீ சமூகம் அதிமகிழ்ச்சிக் கொள்கிறது. கேடியீ 4.0 வின் நெடுநாளைய உருவாக்கத்திற்கும் கேடியீ 4.0 ன் சகாப்தத்திற்கும் இவ் வெளியீடு வித்திடுகிறது.


கேபசூ 4.0 பணிமேசை

கேடியீ 4 நிரலகங்கள் கிட்டத்தட்ட அனைத்து விடயங்களிலுமே பெருத்த மேம்பாடுகளைக் கண்டுள்ளது. தளம் சாரா பல்லூடக துணையினை போனான் பல்லூடக வார்ப்பு அனைத்து கேடியீ செயற்பாடுகளுக்கும் வழங்குகிறது. உறுதியான வன்பொருள் ஒருங்கிணைப்பு வார்ப்பு கருவிகளுடன் உடனுரைவதை சுலபமாக்கி மின்நிர்வாகத்திற்கான திறம்பட நிர்வகிக்க வழிசெய்கிறது.

கேடியீ 4 ன் பணிமேசை சிலப் பெரிய ஆற்றல்களைப் பெற்றுள்ளது. பிளாஸ்மா பணிமேசை பட்டி, மெனு மற்றும் சாளரக் கருவிகளுக்கான புதியதொரு பணிமேசை இடைமுகப்பினைத் தந்து நிரவாகப் பலகையொன்றினையும் தருகிறது. கேடியீயின் சாளர நிர்வாகியான கேவின் அதிநுட்ப வரைகலை தாக்கங்களைத் தருவதோடு சாளரங்களுடனான தங்களின் உரையாடல்களை எளிமையாக்குகிறது.

கேடியீ பயன்பாடுகள் பலவும் மேம்பாடு அடைந்துள்ளன. வெக்டார் சார்ந்த வரைகலைகள், அடிப்படை நிரலகங்களில் மாறுதல்கள், பயனர் இடைமுகப்பு மேம்பாடுகள், புதிய வசதிகள், புதிய பயன்பாடுகள் என கேடியீ 4.0 அனைத்தையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. ஆவணங்களைக் காட்டும் ஆகுலர் , கோப்புகளை நிரவகிக்க டால்பின் ஆகிய இரண்டு பயன்பாடுகள் தான் கேபசூ 4.0 ன் புதிய தொழில்நுட்பங்களை மேன்மையுற பயன்படுத்தியுள்ளவை.

பணிமேசைக்கு புத்தம் புதிய சுவாசத்தினைத் தருகிறது ஆக்ஸிஜன் கலைப்பணி குழு. பயனருக்கு புலப்படும் கேடியீ பணிமேசையின் அனைத்து பாகங்கள் மற்றும் பயன்பாடுகளுக்கு ஒரு ஏற்றம் அளிக்கப் பட்டுள்ளது. அழகும் நிலைத்தன்மையும் ஆக்ஸிஜனின் அடிப்படை அம்சங்களாகும்.

பணிமேசை

கேடியீயின் பணிமேசை இடைமுகப்பு குறித்து மேலுமறிய கேடியீ 4.0 கையேட்டினை அணுகவும்.

பயன்பாடுகள்

அதிக விவரங்களுடன் மேலும் வல பயன்பாடுகள் குறித்து அறியகேடியி 4.0 கையேட்டினை அணுகவும்.

கோப்பு நிர்வாகி, கணினி அமைப்பு மற்றும் மெனுக்களின் திரைக்காட்சிகள்

நிரலகங்கள்

கேடியீயின் நிரலகங்கள் குறித்து மேலுமறிய கேடியீ நுட்பாதாரத்தினை அணுகவும்.

வலம் வர...

கேடியீ காட்சிக் கையேடு கேடியீ 4.0 வின் பல்வேறு புதிய மேம்படுத்தப்பட்டப தொழில்நுட்பங்களைப் பற்றிய விவரங்களைத் தருகிறது. பல்வேறு திரைக்காட்சிகளுடன் விளக்கப் பட்டு கேடியீயின் பல்வேறு பாகங்களை காட்டுவதாகவும் புதிய பொலிவுமிக்க தொழில்நுட்பங்களையும் மேம்பாடுகளையும் விளக்கும் வகையிலும் இது அமைந்துள்ளது. பணிமேசையின் புதிய வசதிகள் கணினி அமைப்புகள் உள்ளிட்ட பயன்பாடுகள், ஆவணங்காட்டி ஆகுலர் மற்றும் டால்பின் போன்றவை அறிமுகப் படுத்தப்படுகின்றன. கல்வி சார் பயன்பாடுகள் மற்றும் விளையாட்டுகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளன.

வாய்ப்பளித்துப் பாருங்களேன்...

பொதிகளைப் பெற்று சோதிக்கவும் பங்களிக்கவும் உதவ விழைவோருக்கு, எண்ணற்ற வழங்கல்கள் தாங்கள் கேடியீ4 ன் பொதிகளை அதன் வெளியீட்டுடனேயே கிடைக்கச் செய்யப்போவதாக தெரிவித்துள்ளனர். அதன் தற்போதைய முழுமையானப் பட்டியலை கேடியீ 4.0 தகவல் பக்கத்தில் காணலாம். அங்கே மூல நிரல்களுக்கான இணைப்புகள்ளையும், ஒடுக்குவதற்கான குறிப்புகளையும், அரண் மற்றும் ஏனைய விவரங்களையும் தாங்கள் காணப் பெறுவீர்கள்.

கீழ்காணும் வழங்கல்கள் கேடியீ 4.0 க்குரிய பழகு வட்டு அல்லது பொதிகளை தயார்படுத்தியிருப்பதாக எங்களித்தே தெரிவித்துள்ளனர்.

கேடியீ 4.0 குறித்து

குறிப்பிட்ட செயல்களின் நிமித்தமும் அன்றாட பயன்பாட்டிற்கான பயன்பாடுகளையும் கொண்ட கட்டற்ற மென்பொருட்களாலான ஆக்கபூர்வமானதொரு பணிச்சூழலாகும் கேடீயீ 4.0. பிளாஸ்மா கேடியீ 4.0 க்கான புதியதொரு பணிமேசை ஓடாகும். கான்கொயரர் இணைய உலாவி இணையத்தினை பணிமேசையுடன் பிணைக்கிறது. டால்பின் கோப்பு நிர்வாகி, ஆகுலர் ஆவண வாசிப்பர் மற்றும் கணினி அமைப்பு நிர்வாக மையம் ஆகியன பணிமேசையின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுகின்றன.
க்யூடி வாயிலாக கேஐஓ மற்றும் அதிநுட்ப காட்சித் திறன்களுடன் பிணைய வளங்களுக்கு எளியதொரு அணுகலைத் தரக் கூடிய கேடியீ நிரலகங்களின் மீது கேடியீ உருவாக்கப்பட்டுள்ளது.

கேடியீ குறித்து

மேசைத்தள மற்றும் உடன் சுமக்க வல்ல கணிமைக்கான கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருட்களை உருவாக்கும் சர்வதேச தொழில்நுட்பக் குழுமமாகும் கேடியீ. கேடியீயின் பொருள்களில் குனு/ லினக்ஸ் மற்றும் யுனிகஸ் தளங்களுக்கானப் பணிமேசைச் சூழல், அலுவலகப் பயன்பாடு, குழு பயன்பாடுகள், இணையம், பல்லூடகம், பொழுதுபோக்கு, கல்வித் துறை, வரைகலை மற்றும் மென்பொருள் ஆக்கத்திற்கான நூற்றுக்கணக்கான மென்பொருட்களும் அடங்கும். கேடியீ மென்பொருள் அறுபதுக்கும் அதிகமான மொழிகளில் பெயர்ககப் பட்டு எளிமையான பயன்பாட்டுக்கு உகந்ததாக நவீன அணுகுமுறைக் கொள்கைகளைக் கருத்தில் கொண்டும் உருவாக்கப் பட்டுள்ளது. கேடியீ4 ன் முழுத் திறன்கொண்ட பயன்பாடுகள் இயல்பாக குனு/ லினக்ஸ், பிஎஸ்டி, சோலாரிஸ், விண்டோஸ் மற்றும் மாக் ஓஎஸ்எக்ஸ் ஸில் இயக்க வல்லதாக உள்ளன.


வர்த்தக முத்திரைக் குறிப்புகள். கேடியீயும்® கே பணிச் சூழல்® முத்திரையும் KDE e.V வர்த்தக முத்திரைகளாகும்

லைனஸ் டோர்வால்டின் வர்த்தக முத்திரை லைனக்ஸ் ஆகும்.

யுனிக்ஸ் அமேரிக்க மற்றும் ஏனைய நாடுகளில் ஓபன் குழுமத்தின் வர்த்தக முத்திரையாகும்.

இவ்வறிவிப்பில் கொடுக்கப் பட்டுள்ள ஏனைய வர்த்தக முத்திரைகளும் பதிப்புரிமைகளும் அதனதன் உரிமையாளர்களுக்கே சொந்தம்.


Press Contacts

For more information send us an email: press@kde.org